என் சோகங்களின் சுமைதாங்கி

திங்கள், 2 செப்டம்பர், 2013

என்னை பற்றி

ரொம்ப நாளா ஒன்னும் எழுதாம இருக்கோமே நம்பலை பற்றி எழுதலாம்னு நினைச்சேன், என்ன இருக்கு என்னை பற்றி எழுத

நா பிறந்தது ஈரோடு
நா போறது தார்ரோடு
சாப்டறது என்னமோ தயிர் சோறு
இதுக்கு மேல என்ன பத்தி சொன்னா வரும் தகராறு

திங்கள், 13 பிப்ரவரி, 2012

நம்ப ஊருல சொல்ற ஒரு பழமொழி " மாமன் செத்தா மயிராச்சு, மாமன் கம்பளி நமக்காச்சு" ஹய்யோ சத்தியமா சொல்றேன் நான் யாரையும் மனசுல வைச்சுக்கிட்டு இதை சொல்லலை
புதுசா கல்யாணமான ஒருத்தன் தன்னோட மாமனார் வீட்டுக்கு போனானாம், அந்த மாப்பிள்ளைக்கு கொஞ்சம் ஜம்பம் அதிகம், போன அன்னைக்கு ராத்திரி எள்ளு, சர்க்கரை கலந்து இடிச்சு மாமியாகாரி வந்த மாபிள்ளைக்கு குடுக்க, அந்த மாப்பிள்ளையோ எவனாச்சும் எள்ளையும் சர்க்கரையும் திம்பானா அப்படின்னு வீம்பு பேசினான், அவனோட பொண்டாட்டி, மாமன், மாமியார், மச்சினன் மத்த உறவு முறைகளும் வந்து சாப்பிட சொல்லி கெஞ்ச அந்த மாப்பிள்ளைக்கோ வீம்பு அதிகமாய் சாபிடாமயே படுத்துட்டான்,

வீட்டுக்கு வெளிய திண்ணைல படுத்துக்கிட்டு இருந்த மாப்பிள்ளைக்கு அர்த்த ராத்திரியில் பசிக்க ஆரம்பிச்சுது, பக்கத்துல மாமியாக்காரி எள்ளை இடிச்ச உரலு இருந்துது அதுல இருந்து நல்ல எள்ளு வாசம் வீச மாப்பிள்ளையோ அந்த எள்ளை எடுத்து சாப்பிட்டு பார்த்து இருக்கான், ரொம்ப நல்ல இருக்க உரலுக்குள்ள தலையவிட்டு அங்கன ஒட்டி இருந்த எல்லா எள்ளையும் சாப்பிட்டுடான் அதுக்கப்புறம் பார்த்தா உரல்ல இருந்து தலையை எடுக்க முடியலை, உடனே கத்தி கூப்பாடு போட ஊரே திரண்டு வந்து மாப்பிள்ளையை உரல்ல இருந்து எடுக்க பார்க்க ஒன்னும் முடியலை, ஊருக்காரங்க உரல ஒடச்சு மாபிள்ளையை காப்பாத்தலாம்னு பேசிக்கிட்டாங்க

ஊட்டுக்குள்ள இருந்த மாமியாகாரி வேக வேகமாய் ஓடி வந்து அய்யய்யோ ஆச மருமகன் தல போனாலும் பரவாயில்லை ஆகி வந்த உரலுக்கு ஒன்னும் ஆகக்கூடாதுன்னு சொன்னாளாம்

தன்னிலை விளக்கம் : ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கணும் யாரையும் நான் மனசுல வைச்சுக்கிட்டு இதை எழுதலை, அதையும் மீறி நீங்களா யாரையாச்சும் நினைச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பல்ல !!!!!!!!!!

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

இந்தியாவிற்கு சுகந்திரம் வாங்கித்தந்தது யார் ? & இந்தியாவின் திரைத்துறையின் பிதாமகன் யார்?

இந்தியாவிற்கு சுகந்திரம் வாங்கித்தந்தது யார் ? கிட்டத்தட்ட 300 வருட போராட்டமா, சுகந்திர வேள்வியில் தன் இன்னுயிர்களை தந்த லட்சக்கணக்கான புனிதர்களா, காந்தியா ????????, யாரும் இல்லை இந்தியாவிற்கு சுகந்திரம் வாங்கித்தந்தது ரோஜாவின் ராஜா திரு . நேரு அவர்கள் தான், எப்படி பார்ப்போம்

அள்ள அள்ள குறையாத வைர சுரங்கத்தை யாராச்சும் தாரை வார்ப்பார்களா ???? வெள்ளைக்காரன் என்ன அவ்வளவு முட்டாளா?????, என்ன செய்வது தனக்கு பிரியமானவளை காப்பாத்த அள்ள அள்ள குறையாத வைர சுரங்கத்தை தாரைவார்த்தார் ஒருவர், சீக்கிரம் விசியத்துக்கு வானு சொல்றது கேக்குது, விசியம் என்னனா இந்தியாவின் கடைசி ஆங்கில வைசிராய் யார் ? ( அது சரி சில பேர்க்கு இந்தியாவுடைய ஜனாதிபதி பேரே தெரியாது அது வேற விசியம் ), திரு. மவுண்ட் பேட்டன் பிரபு அவர்கள் தான், அவருடைய மனைவி திருமதி . எட்வினா அவர்களுக்கு நம்ப ரோஜாவின் ராஜா அவர்களுக்கும் ஏதோ கசமுசா இருந்து இருக்கு, ஹய்யோ சாமி சத்தியமா இதை நான் சொல்லலை, மவுண்ட் பேட்டன் அவர்களுடைய பொண்ணு பமீலா ( நம்ப ஆளுகளுக்கு பமீலானு சொன்னா உடனே பமீலா அண்டேர்சென்னை நினைச்சுக்குவாங்க அவங்க இல்லை ) அவர்கள் எழுதின India remember அப்படிங்கற புத்தகத்தில் நாம ரோஜாவின் ராஜாவுக்கும் அவங்க அம்மாவுக்கும் இருந்த உறவு முறையை விரிவா எழுதிருக்காங்க ( என்ன பண்றது நம்ப ஆராச்சிக்காக ஆங்கில புத்தகங்களை எல்லாம் படிக்க வேண்டி இருக்குது, மக்களே, நீ எப்படி ஆங்கில புத்தகத்தை படிச்ச, அந்த அளவிற்கு உனக்கு அறிவு இருக்குதான்னு கேட்டராதிங்க அதுமட்டும் அல்ல பல பெரிய சாம்ராஜ்யங்கள் சரிவிற்கு பெண்ணாசையே காரணமாய் இருந்து இருக்கிறது )

மவுண்ட் பேட்டன் எவ்ளவு நாள் தான் நல்லவர் மாதிரியே நடிப்பார் ????, மண்ணா, பொண்ணானு போட்டி வந்ததுல பொண்ணு தான் வென்றது, ஆம் மவுண்ட் பேட்டன் பிரபு இந்தியாவிற்கு சுகந்திரம் தர சம்மதித்தார், என்ன பண்றது பொண்டாட்டிய காப்பாத்தியாகணுமே இல்லைனா மானம் மரியாதை எல்லாம் போய்டுமே ( அது சரி பொண்ணுக்கு போட்டியா எதை வைச்சாலும் அது தோத்துத்தான் போகும், இதுக்கு நீங்க வேற அர்த்தம் எடுதுக்கிட்டால் நான் பொறுப்பாக மாட்டேன் )

இதுல இருந்து என்ன தெரியுது, இந்திய தேச தந்தை காந்தி இல்லை நேரு அவர்கள் தான் ( மகராசனுகளா இந்தியாவின் தேச மாதா யாரு எட்வினாவானு கேக்காதிங்க ) , உடனடியாக நாம் செய்யவேண்டியது இந்திய ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தியின் உருவத்தை எடுத்துவிட்டு நேரு அவர்களின் உருவத்தை வைக்க வேண்டும் என்று நாம் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்,

வாழ்க நேருவின் புகழ்
------------------------------------------------------------------------------------------------

இந்தியாவின் திரைத்துறையின் பிதாமகன் யார்னு கேட்டா உடனே தாதா சாகேப் பால்கே என்று தான் சொல்லுவோம் ஆனால் உண்மை என்ன என்றால் இந்திய திரை துறையின் பிதாமகன் ஒரு தமிழர், உங்களில் பல பேர்க்கு தெரிந்து இருக்கலாம் அவர் யார் என்று, முக்கியமாக கோவை சார்ந்த பகுதி நண்பர்களுக்கு கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய பெயர் சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்கள் தான், இந்தியாவிற்கு திரைப்படம் என்றால் என்ன என்று தெரியாத காலத்தில் தனது சொத்துக்களை எல்லாம் விற்று திரைப்பட கருவிகளை வாங்கி இந்தியா முழுவதும் சென்று திரைப்படத்தை திரையிட்டு காட்டியவர் அது மட்டும் அல்ல இலங்கையிலும், பெஷாவரிலும் இவர் திரைப்படங்களை திரையிட்டுள்ளார், 1911 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே அவர்களுக்கே பிலிம் காட்டியவர் நம்ப ஆளு ( அதாவது நம்ப ஆளு திரைப்படத்தை திரையிட்ட பொழுது தாதா சாகேப் பால்கே அதை பார்த்து இருக்கிறார் அதன் பின்தான் திரை துறைக்கு வரும் ஆர்வம் அவருக்கு ஏற்ப்பட்டது ), இப்போ சொல்லுங்க இந்தியாவின் திரை துறையின் பிதாமகன் யார் ? ( சொல்லலாம் குருவை மிஞ்சிய சிஷ்யன் இருக்கிறார் என்று ஆனால் ஒன்று மட்டும் நியாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் ஒரு குரு இல்லாமல் ஒரு சிஷ்யன் உருவாக முடியாது )

இன்னும்மொரு சேதி தென் இந்தியாவின் முதல் சலனப்படம் எடுத்தவர் திரு . நடராஜன் அவர்கள். படத்தின் பெயர் கீச வதம்

வியாழன், 9 பிப்ரவரி, 2012

அரசியல்வாதி

வேலங்குடி வெள்ளைச்சாமி னு ஒருத்தர் ரொம்ப நாளா ஒரு பொதுகூட்டத்துக்கு போகணும்ங்கற ஆசையல ஒரு நாள் ஒரு பொது கூட்டத்துக்கு போறார் அந்த பொதுகூட்டத்தில் ஒருவர் பேசுகிறார் " ஒரு பச்சை யானை இருந்துது அது கருப்பு முட்டை போட்டுச்சு அதுல இருந்து ஒரு நீலக்குருவி வந்தது, அந்த நீலக்குருவி கொத்தி சிங்கம் செத்துபோச்சு, செத்த சிங்கம் ஒரு பூனையோட உடலை வாங்கிக்கிட்டு வந்துச்சாம் " நம்ப வேலங்குடி வெள்ளைச்சாமி பக்கத்தில இருக்கறவர் கிட்ட கேக்கறார் " ஏங்க இப்போ பேசிக்கிட்டு இருக்கறவரு யாருன்னு " அதுக்கு அந்த ஆளு சொல்றார் " அவருதாங்க நம்ப தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்ற MLA அப்படின்னு

நன்றி கண்ணதாசன்

புதன், 25 ஜனவரி, 2012

புதிய கீதை

அர்ஜுனன் கேட்க்கிறான்

பரந்தாமா , எனது காண்டிபம் நிமிர்ந்து நிற்க்கிறது, அதோ அங்கே நிற்பவர்கள் எல்லோரும் என் சகோதர்கள், அவர்கள் மீது கணை வீசும்படியா எனக்கு கட்டளையிடுகிறாய் ? என் கைகள் நடுங்குகின்றன, இந்த பாவத்தை செய்ய என்னை என் தூண்டுகிறாய் ?

பரந்தாமன் சொல்கிறான்

பல்குனா

உன் மயக்கம் நியாமன்றது, அவர்கள் உன் சகோதர்கள் என்பதை சிந்திக்க வேண்டிய நேரம் இதுவல்ல, அவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள், ஆகவே அவர்கள் மீது கணையெரிவதுதான் உனக்கு நியாயம்

அர்ஜுனன் கேட்க்கிறான் ஆட்சியில் இருப்பவர்கள் என்பதற்காக மட்டுமே அவர்களை அழித்தொழிக்க வேண்டுமா ?

பரந்தாமன் சொல்கிறான்

அதுதான் தர்மம், ஏராளமான மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை தான் ஒரு சத்ரியன் செய்வான்! ஏராளமான மக்களால் வெருக்கப்படுபவர்களை நீயும் சேர்ந்து வெறுப்பதுதான் தர்மம்

என்னை பார் ! நீங்கள் ஆட்சியில் இருந்த பொழுது தர்மன் சூதாடினானே, அப்பொழுது நான் துணையாக வந்தேனா ? நீங்கள் எதிர்க்கட்சியானவுடனே வந்து விட்டேன் ! என்னை எல்லோரும் நேசிக்கிறார்கள் ஏன்? எப்பொழுதும் எதிர்க்கட்சில் இருப்பவனை நேசிப்பதுதான் மக்களின் பழக்கம், எதிர்க்கட்சியில் இருப்பவன் தான், தவறு செய்தால் கூட மக்களின் பெயரால் செய்யமுடியும், இப்பொழுது நீ செய்வது தவறேயானாலும், உன்னை தான் மக்கள் விரும்புவார்கள், காண்டிபனே காண்டிபத்தில் கணையை ஏற்று

அர்ஜுனன் கேட்க்கிறான்

மாதவா, நாளை நானே ஆட்சிக்கு வந்தாலும் ஏன் கதியும் இதுதானா ?

பரந்தாமன் சொல்கிறான்

சந்தேகமென்ன ? நாளை நீ ஆட்சிக்கு வந்தால், நானே கௌரவர்கள் பக்கம் சேந்தாலும் சேர்ந்து விடக்கூடும் ! பெருவாரியான மக்களின் விருப்பத்தை நான் எப்படி மீற முடியும் ?

அர்ஜுனன் சொல்கிறான்

நல்லது பரந்தாமா ! நான் இன்று தவறு செய்தாலும் அதை மக்களின் பெயரால் செய்துவிட முடியும் அல்லவா ? மிகவும் சரி, ஏன் கணை இன்று யார் மீதாவது பாய்ந்தாக வேண்டும், அடிக்கடி இத்தகைய போர் தளங்கள் தோன்றி அமைதியை கெடுக்கக்கூடாது என்ற பெருவாரியான மக்களின் விருப்பத்தை நான் எப்படி மீற முடியும் ?

பரந்தாமன் கேட்க்கிறான்

அர்ஜுனா நீ என்ன சொல்கிறாய் ?


பரந்தாமன் சொல்கிறான்

எப்பொழுதும் எதிர்க்கட்சிகளையே ஆதரிக்கும் உன் செயல் தானே இந்த போர்களங்களுக்கு காரணம் ! இப்பொழுது பெருவாரியான மக்களின் விருப்பப்படி ஏன் காண்டிபம் உன்னை குறிவைக்கிறது

கண்ணன் மூர்ச்சையடைகிறான்
------------------------------------------------------------------------------------------------

ஹய்யோ இது சத்தியமா நான் சொல்லலைங்கோ சொன்னது என்னுடைய கவியரசு கண்ணதாசன் அவர்கள்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

நாடோடி கதைகள்

ஒருத்தன் சொன்னானாம் நீ கடலையை கொண்டுவா நான் உமியை கொண்டுவறேன் ரெண்டுபேரும் ஊதி ஊதி திம்போம்னு

அதுக்கு இன்னொருத்தன் சொன்னானாம் நீ சீடையை கொண்டுவா நான் கல்லை கொண்டுவறேன், நீ தட்டு நான் திங்கறேன்னு