என் சோகங்களின் சுமைதாங்கி

திங்கள், 13 பிப்ரவரி, 2012

புதுசா கல்யாணமான ஒருத்தன் தன்னோட மாமனார் வீட்டுக்கு போனானாம், அந்த மாப்பிள்ளைக்கு கொஞ்சம் ஜம்பம் அதிகம், போன அன்னைக்கு ராத்திரி எள்ளு, சர்க்கரை கலந்து இடிச்சு மாமியாகாரி வந்த மாபிள்ளைக்கு குடுக்க, அந்த மாப்பிள்ளையோ எவனாச்சும் எள்ளையும் சர்க்கரையும் திம்பானா அப்படின்னு வீம்பு பேசினான், அவனோட பொண்டாட்டி, மாமன், மாமியார், மச்சினன் மத்த உறவு முறைகளும் வந்து சாப்பிட சொல்லி கெஞ்ச அந்த மாப்பிள்ளைக்கோ வீம்பு அதிகமாய் சாபிடாமயே படுத்துட்டான்,

வீட்டுக்கு வெளிய திண்ணைல படுத்துக்கிட்டு இருந்த மாப்பிள்ளைக்கு அர்த்த ராத்திரியில் பசிக்க ஆரம்பிச்சுது, பக்கத்துல மாமியாக்காரி எள்ளை இடிச்ச உரலு இருந்துது அதுல இருந்து நல்ல எள்ளு வாசம் வீச மாப்பிள்ளையோ அந்த எள்ளை எடுத்து சாப்பிட்டு பார்த்து இருக்கான், ரொம்ப நல்ல இருக்க உரலுக்குள்ள தலையவிட்டு அங்கன ஒட்டி இருந்த எல்லா எள்ளையும் சாப்பிட்டுடான் அதுக்கப்புறம் பார்த்தா உரல்ல இருந்து தலையை எடுக்க முடியலை, உடனே கத்தி கூப்பாடு போட ஊரே திரண்டு வந்து மாப்பிள்ளையை உரல்ல இருந்து எடுக்க பார்க்க ஒன்னும் முடியலை, ஊருக்காரங்க உரல ஒடச்சு மாபிள்ளையை காப்பாத்தலாம்னு பேசிக்கிட்டாங்க

ஊட்டுக்குள்ள இருந்த மாமியாகாரி வேக வேகமாய் ஓடி வந்து அய்யய்யோ ஆச மருமகன் தல போனாலும் பரவாயில்லை ஆகி வந்த உரலுக்கு ஒன்னும் ஆகக்கூடாதுன்னு சொன்னாளாம்

தன்னிலை விளக்கம் : ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கணும் யாரையும் நான் மனசுல வைச்சுக்கிட்டு இதை எழுதலை, அதையும் மீறி நீங்களா யாரையாச்சும் நினைச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பல்ல !!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக