என் சோகங்களின் சுமைதாங்கி

புதன், 25 ஜனவரி, 2012

புதிய கீதை

அர்ஜுனன் கேட்க்கிறான்

பரந்தாமா , எனது காண்டிபம் நிமிர்ந்து நிற்க்கிறது, அதோ அங்கே நிற்பவர்கள் எல்லோரும் என் சகோதர்கள், அவர்கள் மீது கணை வீசும்படியா எனக்கு கட்டளையிடுகிறாய் ? என் கைகள் நடுங்குகின்றன, இந்த பாவத்தை செய்ய என்னை என் தூண்டுகிறாய் ?

பரந்தாமன் சொல்கிறான்

பல்குனா

உன் மயக்கம் நியாமன்றது, அவர்கள் உன் சகோதர்கள் என்பதை சிந்திக்க வேண்டிய நேரம் இதுவல்ல, அவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள், ஆகவே அவர்கள் மீது கணையெரிவதுதான் உனக்கு நியாயம்

அர்ஜுனன் கேட்க்கிறான் ஆட்சியில் இருப்பவர்கள் என்பதற்காக மட்டுமே அவர்களை அழித்தொழிக்க வேண்டுமா ?

பரந்தாமன் சொல்கிறான்

அதுதான் தர்மம், ஏராளமான மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை தான் ஒரு சத்ரியன் செய்வான்! ஏராளமான மக்களால் வெருக்கப்படுபவர்களை நீயும் சேர்ந்து வெறுப்பதுதான் தர்மம்

என்னை பார் ! நீங்கள் ஆட்சியில் இருந்த பொழுது தர்மன் சூதாடினானே, அப்பொழுது நான் துணையாக வந்தேனா ? நீங்கள் எதிர்க்கட்சியானவுடனே வந்து விட்டேன் ! என்னை எல்லோரும் நேசிக்கிறார்கள் ஏன்? எப்பொழுதும் எதிர்க்கட்சில் இருப்பவனை நேசிப்பதுதான் மக்களின் பழக்கம், எதிர்க்கட்சியில் இருப்பவன் தான், தவறு செய்தால் கூட மக்களின் பெயரால் செய்யமுடியும், இப்பொழுது நீ செய்வது தவறேயானாலும், உன்னை தான் மக்கள் விரும்புவார்கள், காண்டிபனே காண்டிபத்தில் கணையை ஏற்று

அர்ஜுனன் கேட்க்கிறான்

மாதவா, நாளை நானே ஆட்சிக்கு வந்தாலும் ஏன் கதியும் இதுதானா ?

பரந்தாமன் சொல்கிறான்

சந்தேகமென்ன ? நாளை நீ ஆட்சிக்கு வந்தால், நானே கௌரவர்கள் பக்கம் சேந்தாலும் சேர்ந்து விடக்கூடும் ! பெருவாரியான மக்களின் விருப்பத்தை நான் எப்படி மீற முடியும் ?

அர்ஜுனன் சொல்கிறான்

நல்லது பரந்தாமா ! நான் இன்று தவறு செய்தாலும் அதை மக்களின் பெயரால் செய்துவிட முடியும் அல்லவா ? மிகவும் சரி, ஏன் கணை இன்று யார் மீதாவது பாய்ந்தாக வேண்டும், அடிக்கடி இத்தகைய போர் தளங்கள் தோன்றி அமைதியை கெடுக்கக்கூடாது என்ற பெருவாரியான மக்களின் விருப்பத்தை நான் எப்படி மீற முடியும் ?

பரந்தாமன் கேட்க்கிறான்

அர்ஜுனா நீ என்ன சொல்கிறாய் ?


பரந்தாமன் சொல்கிறான்

எப்பொழுதும் எதிர்க்கட்சிகளையே ஆதரிக்கும் உன் செயல் தானே இந்த போர்களங்களுக்கு காரணம் ! இப்பொழுது பெருவாரியான மக்களின் விருப்பப்படி ஏன் காண்டிபம் உன்னை குறிவைக்கிறது

கண்ணன் மூர்ச்சையடைகிறான்
------------------------------------------------------------------------------------------------

ஹய்யோ இது சத்தியமா நான் சொல்லலைங்கோ சொன்னது என்னுடைய கவியரசு கண்ணதாசன் அவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக